ஆன்மிகம்
முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா

முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா

Published On 2020-12-05 04:08 GMT   |   Update On 2020-12-05 04:08 GMT
முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார்.
குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவான முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

நிகழ்ச்சியில், பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ், குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின், நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் இணை பங்குதந்தை தாமஸ், பங்குபேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன் மணி, பொருளாளர் விஜிகலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ் கூறுகையில், முளகுமூடு தூய மரியன்னை பேராலயம் குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்சால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா விரைவில் நடைபெற உள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைஆசிர் பெற்று செல்கிறார்கள் என்றார்.
Tags:    

Similar News