செய்திகள்
விஜய் வசந்த்

மேகதாது அணை விவகாரம்... பாராளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும் -விஜய் வசந்த்

Published On 2021-07-17 17:20 GMT   |   Update On 2021-07-17 17:20 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டனங்களை தெரிவிக்க உள்ளதாக விஜய் வசந்த் எம்பி கூறினார்.

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

# மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும். 

# நீட் விவகாரத்தை பொறுத்தவரையில் போதியளவு கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு நீட்டுக்கு விதி விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. ஆதலால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. 

# டீசல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவிப்போம். 



#தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேவையில்லாமல் கொங்குநாடு என்ற பெயரில் ஒரு பிரிவினையை கொண்டு வர முயல்கிறது. ஒரு காங்கிரஸ்காரனாக மட்டுமில்லாமல் ஒரு தமிழனாகவும் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

#  தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் முடிவதற்குள் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது தவறான செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News