வழிபாடு
சிவன் பார்வதி

படியளக்கும் லீலையும் மதுரை திருவிழாவும்...

Published On 2021-12-24 07:20 GMT   |   Update On 2021-12-24 07:20 GMT
மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. படியளக்கும் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
படியளக்கும் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

கயிலையில் சிவபெருமானை ஒருமுறை சோதிக்க பார்வதிதேவி முயன்றார். அனைத்து ஜீவராசிகளுக்கும் நீங்கள் சாப்பாடு கொடுத்து விடுவீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு இறைவன், ஆம் என்றும், எல்லா நேரத்திலும் என் கடமைகளை செய்து கொண்டிருப்பேன் என்றும் கூறினார். அப்போது, பார்வதிதேவி ஒரு குவளையில் எறும்பு ஒன்றை உள்ளே போட்டு மூடி விட்டார்.

மறுநாள் இறைவனிடம் அந்த குவளையை காண்பித்து இதில் அடைப்பட்டு கிடக்கும் இந்த ஜீவராசிக்கும் நீங்கள் சாப்பாடு கொடுத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார். அப்போது சிவபெருமான் ஆம் என்று கூறி அதனை திறக்க சொன்னார். பார்வதி தேவி அதனை திறந்து பார்த்த போது அதில் எறும்பு அரிசியை தின்று கொண்டிருந்தது.

அந்த லீலையை விளக்கும் நிகழ்வாகத்தான் அனைத்து சிவன் கோவில்களிலும் மார்கழி மாதம் அஷ்டமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News