ஆன்மிகம்
கோவில்களில் கிடா வெட்டி சிறப்பு பூஜை

ஆடி 28-ம் நாளையொட்டி கோவில்களில் கிடா வெட்டி சிறப்பு பூஜை

Published On 2020-08-13 05:26 GMT   |   Update On 2020-08-13 05:26 GMT
ஆடி மாதம் 28-ம் நாளையொட்டி கோவில்களில் கிடா, கோழி பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் 28-ம் நாளையொட்டி நேற்று பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிக்கருப்பு கோவில், பாலக்கரை செங்குளம்காலனியில் உள்ள இருங்கங்குடி மாரியம்மன் கோவில், ஒண்டிகருப்பு கோவில், பிறாயடி கருப்புகோவில் உள்பட திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கருப்பு, முனீஸ்வரன், அய்யனார் கோவில்களில் கிடா, கோழி பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சாலையோரங்களில் உள்ள விநாயகர், முருகன், அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
Tags:    

Similar News