தொழில்நுட்பம்
சோனி வயர்லெஸ் இயர்பட்ஸ்

சோனி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-06-26 05:19 GMT   |   Update On 2020-06-26 05:19 GMT
சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சோனி நிறுவனத்தின் WF-XB700 மற்றும் WF-SP800N ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சோனி WF-XB700 மாடலில் 12எம்எம் டிரைவர்களும் சோனியின் எக்ஸ்டிரா பேஸ் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இது பயனர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5 மூலம் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் இந்த இயர்பட்ஸ் சீரான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்க பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இயர்பட்ஸ் மட்டும் ஒன்பது மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

புதிய WF-SP800N மாடலில் நாய்ஸ் கேன்சலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் IP55தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் எக்ஸ்டிரா பேஸ் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் போன்றே இதுவும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. 

மேலும் டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதி, அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல், இன்ட்யூட்டிவ் டச் கண்ட்ரோல் மற்றும் இயர்பட்ஸ் அம்சங்களை இயக்க பட்டன்கள், 9 மணி நேர பேட்டரி பேக்கப், சார்ஜிங் கேசுடன் அதிகபட்சம் 26 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

சோனி WF-ZB700 இயர்போன் விலை ரூ. 9900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோனி WF-SP800N இயர்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News