செய்திகள்
திருப்பூர் கட்டுப்பாடு பகுதி

திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாடு பகுதிகள் 41ஆக அதிகரிப்பு

Published On 2021-04-22 05:27 GMT   |   Update On 2021-04-22 13:07 GMT
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 41 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 973 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த 60 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 233 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தொற்றுபரவல் அதிகம் உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 41 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகளானது தாராபுரம் நகராட்சி நாச்சிமுத்துபுதூர், காங்கயம் பாலிக்காடு, போக்குவரத்து நகர், உடுமலை காந்திநகர், சிவசுப்பிரமணியன் லே அவுட், சக்தி நகர், சுந்தர்நகர் பகுதிகள்.

திருப்பூர் மாநகராட்சியில் நல்லூர் ஜெய் நகர், காட்டன் மில் ரோடு பாரதியார் நகர், கூத்தம்பாளையம் ஜெ.பி., நகர், நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன், கருவம்பாளையம் கிரிநகர், அனுப்பர்பாளையம் சாஸ்திரி நகர், வீரபாண்டி ஜீவா நகர் பகுதிகள்.

உடுமலை ஒன்றியத்தில் ராவணாபுரம், எஸ்.வி., புரம், தும்பளப்பட்டி, குடிமங்கலம் புக்குளம், குன்னத்தூர் அக்ரஹாரம், பொங்கலூர் திருமலைபாளையம், மூலனூர் அண்ணா நகர், திருப்பூர் காளிபாளையம், கிருஷ்ணா நகர், அவிநாசி கருக்கன்காட்டுப்புதூர், நாதம்பாளையம், பழங்கரை, பல்லடம் செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப்பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிறப்பு அதிகாரி உத்தரவிட்டபடி, கொரோனா பாதித்த பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பதில், ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றனர்.
Tags:    

Similar News