ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

Published On 2020-12-25 06:44 GMT   |   Update On 2020-12-25 06:44 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருமலை :

திருப்பதிஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும்  அனுமதிக்கப்படவில்லை.

தனூர் மாதத்தையொட்டி சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை சேவை நடந்தது. 1.30 மணி முதல் 3 மணி வரை அர்ச்சனை சேவை, தோமாலை சேவையும், அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் நடந்தது

ரூ.300 கட்டண சிறப்பு தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்கள் காலை 8 மணி முதல்
சொர்க்கவாசல்
வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் அலங்காரத்திலும் கோபுரம் உள்பட கோவில் வளாகம் ஜொலிக்கிறது.

திருமலை கருடாத்ரி நகர் சோதனைச் சாவடியில் இருந்து திருமலை முழுவதும் மலர்களால் மின்விளக்குகளாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தங்க ரதப்புறப்பாடும், துவாதசி அன்று காலை தீர்த்தவாரி
யும் நடக்கிறது. பக்தர்களின் வருகைக்கு தக்கவாறு லட்டு தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

10 நாட்களுக்கு அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வைகுண்ட காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் நலனை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் முழு நேரமும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் தரிசனத்திற்காக ரூ.300 கட்டணத்தில் 2 லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 18 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள், கூடுதலாக கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இலவச தரிசனத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

கல்யாண உற்சவத்துக்கு முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், இன்றும், 26-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளை தவிர்த்து மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வரலாம்.
Tags:    

Similar News