செய்திகள்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-11-07 08:29 GMT   |   Update On 2020-11-07 08:29 GMT
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், பொது மக்கள் முதல் பொது சேவையில் ஈடுபடும் மக்கள் பிரநிதிகள், கொரோனா களப்பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள், காவல் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

“எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. எனினும், கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள், அல்லது பாதுகாப்பாக மருத்துவ கண்காணிப்பில் இருங்கள்” என ஆளுநர் கூறியதாக ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News