செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் சோயா புண்ணாக்கு உற்பத்தி - கறிக்கோழி உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-10-11 04:59 GMT   |   Update On 2021-10-11 04:59 GMT
குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் சோயா புண்ணாக்கு அங்கிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
திருப்பூர்:

தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகள் வாயிலாக வாரம் 2 கோடி கிலோ கறிக்கோழிகளும், திருப்பூர், கோவை, ஈரோடு, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு உட்பட்டு வாரம் 40 லட்சம் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இந்தநிலையில் சோயா புண்ணாக்கு கறிக்கோழிகளின் பிரதான தீவனமாக உள்ளது. அவ்வப்போது தீவனங்களின் விலை உயர்ந்து வருவதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருதி தமிழகத்தில் சோயா புண்ணாக்கு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:

குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் சோயா புண்ணாக்கு அங்கிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ 50 ஆயிரம் மெட்ரிக் டன் சோயா புண்ணாக்கு கறிக்கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும், இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன. 

சோயா புண்ணாக்கு விலை அவ்வப்போது உயர்வதால் தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வளவு தேவை இருந்தும், தமிழகத்தில் சோயா புண்ணாக்கு உற்பத்தி குறித்த விழிப்புணர்வு கிடையாது.

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் அண்டை மாநில விவசாயிகளுக்கு செல்கிறது. தமிழக விவசாயிகளுக்கு மானியத்தில் விதை வழங்கி சோயா புண்ணாக்கு உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News