ஆட்டோமொபைல்
ராயல் என்பீல்டு Meteor 350

ஒரே மாதத்தில் 7 ஆயிரம் யூனிட்கள் - விற்பனையில் அசத்தம் புதிய மோட்டார்சைக்கிள்

Published On 2020-12-23 08:42 GMT   |   Update On 2020-12-23 08:42 GMT
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய Meteor 350 குரூயிசர் மோட்டார்சைக்கிளை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை நவம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் 7031 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் நவம்பர் 2020 விற்பனையில் கிளாசிக் 350 மாடலுக்கு அடுத்தப்படி அதிகம் விற்பனையான ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பதிய Meteor 350 பெற்று உள்ளது. இது புல்லட் 350 மற்றும் எலெக்ட்ரா 350 மாடல்களை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



எலெக்ட்ரா, புல்லட், Meteor மற்றும் கிளாசிக் என ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் நான்கு மாடல்களை 350சிசி பிரிவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் அனைத்து மாடல்களிலும் மொத்தமாக 56,494 யூனிட்கள் விற்பனை செய்து இருக்கிறது. இதில் கிளாசிக் 350 மாடல் மட்டும் 69 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து புதிய Meteor 350 மாடல் 12 சதவீத விற்பனையை பதிவு செய்து இருக்கிறது. புல்லட் மற்றும் எலெக்ட்ரா மாடல்கள் முறையே 11 சதவீதம் மற்றும் 6 சதவீத பங்குகளை கடந்த மாதம் பெற்று இருந்தன.

Tags:    

Similar News