உள்ளூர் செய்திகள்
தாக்குதல்

திண்டிவனத்தில் அபராதம் வசூலித்த பணியாளர்கள் மீது தாக்குதல்

Published On 2022-01-12 10:22 GMT   |   Update On 2022-01-12 10:22 GMT
திண்டிவனம் காந்தி சிலை அருகில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள், கண்காணிப்பில் ஈடுபட்டு முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து பணம் வசூல் செய்தனர்.
திண்டிவனம்:

அப்போது, அவ்வழியாக வந்த மேல்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், என்பவரிடம் முக கவசம் அணியாமல் வந்ததற்கு, அபராதம் விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டனுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம், ஒப்பந்த பணியாளர் ஆனந்தி ஆகியோரை தாக்கியுள்ளார். இது குறித்து செல்வம் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Tags:    

Similar News