வழிபாடு
முருக பக்தர்கள்பாதயாத்திரை

முருக பக்தர்கள் இரவு நேரத்தில் பாதயாத்திரை செல்ல தடை

Published On 2022-01-07 06:49 GMT   |   Update On 2022-01-07 06:49 GMT
முருக பக்தர்கள் பாதயாத்திரையை ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பாத யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்துவது சம்பந்தமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதியில் இரவு நேர ஊரடங்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணிக்கு வணிக நிறுவனங்கள், கடைகளை அடைக்க வேண்டும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

முருக பக்தர்கள் பாதயாத்திரையை ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பாத யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களுடைய பாதயாத்திரையை திட்டமிட்டு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News