தொழில்நுட்பம்
சியோமி டீசர்

விரைவில் இந்தியா வரும் சியோமி லேப்டாப்

Published On 2020-06-02 07:16 GMT   |   Update On 2020-06-02 07:16 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ நோட்புக் லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.



சியோமி நிறுவனச்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

புதிய லேப்டாப் மாடலின் சர்வதேச அறிமுக நிகழ்வு இந்தியாவில் நடைபெறும் என்றும் இது இந்திய சந்தைக்கான பிரத்யேக சாதனமாக இருக்கும் என்றும் சியோமி தெரிவித்துள்ளது. புதிய சியோமி லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.



முந்தைய தகவல்களின் படி எம்ஐ நோட்புக் லேப்டாப் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு, ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என சியோமி அறிவித்தது.

புதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டீசர்களாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்சமயம் புதிய லேப்டாப் மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் புதிய லேப்டாப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News