செய்திகள்
சின்ன வெங்காயம்

ஆண்டிப்பட்டியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

Published On 2020-10-18 13:48 GMT   |   Update On 2020-10-18 13:48 GMT
ஆண்டிப்பட்டியில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி தாலுகாவில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் செடிகளில் இன்னும் விளைச்சல் ஏற்படாததால், காய்கறி சந்தையில் சின்ன வெங்காயத்தின் வரத்து அடியோடு குறைந்துள்ளது. வரத்து இல்லாத காரணத்தால் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பொதுவாக ஆண்டிப்பட்டி காய்கறி சந்தைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 டன் வரை சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 500 கிலோ முதல் ஒரு டன் வரை மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதனால் சின்ன வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே தொடர்ந்து அதிகரித்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News