தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் 4

அசத்தல் அம்சங்கள், பிரீமியம் விலை - சர்பேஸ் லேப்டாப் 4 இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-05-25 10:42 GMT   |   Update On 2021-05-25 10:42 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் லேப்டாப் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சர்பேஸ் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 11th Gen இன்டெல் கோர் பிராசஸர், ஐரிஸ் Xe கிராபிக்ஸ், ஏஎம்டி ரைசன்7 4000 சீரிஸ் மற்றும் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், டோன்-ஆன்-டோன் அல்கான்ட்ரா மற்றும் மெஷின்டு அலுமினியம் ஆல்-மெட்டல் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. 



இவற்றில் 3:2 பிக்சல்சென்ஸ் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் ஹெச்டி கேமரா, டால்பி அட்மோஸ் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் உள்ளன. 13.5 இன்ச் ஏஎம்டி ரைசன் மாடல் 19 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
  
இந்தியாவில் புதிய சர்பேஸ் லேப்டாப் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1,02,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,77,499 ஆகும். புதிய சர்பேஸ் லேப்டாப் அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
Tags:    

Similar News