செய்திகள்
கோப்புபடம்

ஆப்கானிஸ்தான் விமான படைக்கு தொடர்ந்து உதவி - அமெரிக்கா அறிவிப்பு

Published On 2021-07-26 14:45 GMT   |   Update On 2021-07-26 14:45 GMT
தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன.

ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் படைகள் முற்றிலும் வாபஸ் ஆகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள் நாட்டை கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள்.

நாட்டின் பாதி இடங்கள் தற்போது தலிபான்கள் வசம் சென்றுள்ளன. மற்ற பகுதிகளை காப்பாற்ற ஆப்கானிஸ்தான் ராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமெரிக்க அதிபருடன் பேசினார்.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு சில உதவிகளை செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது. தலிபான்கள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பல இடங்களிலும் தலிபான்களின் முன்னேற்றத்தை ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் குண்டு வீசி தடுத்து வருகின்றன. அமெரிக்காவின் உதவி நீடிக்கும் என்று அறிவித்திருப்பதால் ஆப்கானிஸ்தான் விமானப்படை இன்னும் தாக்குதலை இன்னும் தீவிரமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் பல இடங்களிலும் எதிரிகளை கொன்று குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக உள்ள கிராம மக்களை குறிவைத்து கொல்கிறார்கள்.

காசினி என்ற கிராமத்தில் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் 43 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் வீடுகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். பல வீடுகளுக்கு தீ வைத்தார்கள்.

பல இடங்களில் அரசு ஊழியர்களை தலிபான்கள் கொன்றுள்ளனர். தலிபான்களின் இந்த தாக்குதலால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News