ஆன்மிகம்
அங்குரார்பணம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 100 கிலோ எடையில் தங்கத்தகடு பதிக்கும் பணி

Published On 2021-09-09 06:06 GMT   |   Update On 2021-09-09 06:06 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி காலை 9.40 மணியில் இருந்து காலை 10 மணி வரை துலா லக்னத்தில் பாலாலய கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலின் விமான கோபுரத்துக்கு 100 கிலோ எடையில் தங்கத்தகடு பதிக்கப்பட உள்ளது. அதற்காக கோவிலில் 5 நாள் பாலாலய நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை புற்றுமண் எடுத்து வந்து யாக சாலையில் ஹோமம் வளர்த்து, சிறப்புப்பூஜைகள் செய்து, அங்குரார்பணம் நடந்தது.

அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலின் விமான கோபுரத்தில் 100 கிலோ எடையில் தங்கத்தகடு பதிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதற்காக, கோவில் யாகசாலையில் பாலாலய நிகழ்ச்சி 5 நாட்கள் நடக்கிறது. வருகிற 13-ந்தேதி காலை 9.40 மணியில் இருந்து காலை 10 மணி வரை துலா லக்னத்தில் பாலாலய கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது, என்றார்.

நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, பறக்கும் படை அதிகாரி மனோகர், கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாச தீட்சிதர், ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News