செய்திகள்
கைது

நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்தில் மது விற்ற 147 பேர் கைது

Published On 2020-10-31 11:38 GMT   |   Update On 2020-10-31 11:38 GMT
நெல்லை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்தில் மது விற்ற 147 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 9,460 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். தாழையூத்து பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதவிர சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 147 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 1,412 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News