செய்திகள்
கோப்புபடம்

திருமூர்த்திமலை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Published On 2021-08-03 10:27 GMT   |   Update On 2021-08-03 10:27 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது.
உடுமலை:

அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அது தவிர பூலாங்கிணர், கணக்கம்பாளையம், உடுமலை,குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட  பகுதிகளில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஆறுகள் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து திருமூர்த்திஅணைக்கு காண்டூர் கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்தது.  

அதைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் . இதையடுத்து  இன்று முதல் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு அரசு உத்தரவிட்டது- . அதன்படி  திருமூர்த்திமலை அணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமைச்சர்கள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைக்கின்றனர்.
Tags:    

Similar News