ஆன்மிகம்
சீனிவாசமங்காபுரம் கோவிலில் கார்த்திகை வனபோஜனம்

சீனிவாசமங்காபுரம் கோவிலில் கார்த்திகை வனபோஜனம்

Published On 2020-12-12 03:39 GMT   |   Update On 2020-12-12 03:39 GMT
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை துவாதசியையொட்டி கார்த்திகை வனபோஜனம் நடந்தது.
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை துவாதசியையொட்டி நேற்று கார்த்திகை வனபோஜனம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமியை அங்குள்ள கல்யாண உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர்.

அங்கு உற்சவர்களுக்கு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன்பிறகு உற்சவர்களுக்கு அலங்காரம் செய்து, கார்த்திகை வனபோஜன உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தினர். கார்த்திகை வனபோஜன உற்சவத்தையொட்டி அன்னமாச்சாரியார் திட்டம் சார்பில் பக்தி சங்கீத நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News