தொழில்நுட்பம்
கோப்புப்படம்

இணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 லைட் விவரங்கள்

Published On 2020-12-26 06:04 GMT   |   Update On 2020-12-26 06:04 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் பிளாக்ஷிப் மாடல்கள் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் புதிதாக பேஸ் மாடல் மற்றும் ப்ரோ வேரியண்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களில் ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்களில் ஒன்பிளஸ் 9 லைட் பல்வேறு அம்சங்கள் ஒரே மாதிரி கொண்டிருக்கும் என தெரிகிறது. அதன்படி அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான கேமரா செட்டப், டிஸ்ப்ளே செட்டிங், மென்பொருள் அனுபவம் கொண்டிருக்கும்.

சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 9 லைட் மாடல் விலை 600 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,100 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. ஒன்பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

Tags:    

Similar News