செய்திகள்
விற்பனைக்கு வந்துள்ள குஜராத் வெள்ளை பெரிய வெங்காயத்தை படத்தில் காணலாம்.

திருப்பூரில் குஜராத் வெங்காயம் ரூ.33-க்கு விற்பனை

Published On 2021-02-22 00:31 GMT   |   Update On 2021-02-22 00:31 GMT
திருப்பூருக்கு 25 டன் குஜராத் வெங்காயம் கொண்டு வரப்பட்டு கிலோ ரூ.33-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

சமையலில் முக்கிய பங்கு வகிப்பது சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ஆகும். தினமும் பயன்படுத்தும் ஒரு சமையல் பொருளாக வெங்காயம் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் சின்ன மற்றும் பெரிய வெங்காயம் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஏராளமான கடைகளும் அங்குள்ளன. இந்த வியாபாரிகள் மராட்டியம் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயத்தை கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கிடையே தற்போது அந்த பகுதிகளில் வெங்காய சீசன் இல்லாததால் குஜராத்தில் இருந்து நேற்று விற்பனைக்காக வெங்காயம் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:-

மராட்டியத்தில் இருந்து வெங்காயம் அதிகமாக கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறோம். தற்போதுஅந்த பகுதிகளில் வெங்காய விளைச்சல் முடிவடைந்து, சீசன் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது வெங்காய தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில், குஜராத்தில் இருந்து வெள்ளை நிற வெங்காயம் மற்றும் சிவப்பு நிற வெங்காயம் 25 டன் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

தற்போது இந்த வெள்ளை நிற வெங்காயத்தின் விற்பனையும் நன்றாக இருக்கிறது. இவற்றின் சுவையும் மற்ற வெங்காயத்தை போல் தான் இருக்கிறது. இதனால் பலரும் விருப்பமாக வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள். இவற்றில் வெள்ளை வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.33 வரையும், சிவப்பு வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News