ஆன்மிகம்
முருகன்

பெங்களூரு குமாரசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நிறுத்தி வைப்பு

Published On 2020-08-10 09:43 GMT   |   Update On 2020-08-10 09:43 GMT
கொரோனா பரவல் காரணமாக பெங்களூரு அனுமந்தநகரில் உள்ள குமாரசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல, இந்த ஆண்டும் வருகிற 11-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரை 3 நாட்கள் ஆடிக்கிருத்திகை திருவிழா நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குமாரசுவாமி கோவில் ஆடிக்கிருத்திகை திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குமாரசுவாமி கோவில் காரிய கமிட்டியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு அனுமந்தநகர் குமாரசுவாமி கோவிலில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3 நாட்கள் ஆடிக்கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், ஆடிக்கிருத்திகை திருவிழா, அரோஹரா காவடி திருவிழா, முருகன் தரிசனம் ஆகியவற்றை நிறுத்தி வைக்கும்படி கர்நாடக அரசின் இந்து அறநிலைய துறை தெரிவித்துள்ளது.

அதன்படி குமாரசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நிறுத்தி வைக்கப்படுகிறது. பக்தர்கள் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News