வழிபாடு
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Published On 2021-12-23 05:43 GMT   |   Update On 2021-12-23 05:43 GMT
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் குடமுழுக்கையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் குடமுழுக்கு கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி நாடியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

 இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் வழிகாட்டுதல்படி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் குடமுழுக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. விழாவில் நகர வர்த்தக சங்கத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திருப்பணிக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஆய்வாளர் பிரகாஷ், செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆலய கணக்கர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News