தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோமி 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்

மிட் ரேஞ்ச் விலையில் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ள ஜியோமி 12 சீரிஸ்

Published On 2022-03-16 05:44 GMT   |   Update On 2022-03-16 05:44 GMT
இந்த சீரிஸில் ஜியோமி 12, ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் என்ற 3 போன்கள் இடம்பெற்றுள்ளன.
ஜியோமி நிறுவனத்தின் ஜியோமி 12 சீரிஸ் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிளாக்‌ஷிப் போனான இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சீரிஸ் உலக அளவில் வெளியாகியுள்ளது.

இந்த சீரிஸில் ஜியோமி 12, ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் என்ற 3 போன்கள் இடம்பெற்றுள்ளன.

ஜியோமி 12 மற்றும் ஜியோமி 12 எக்ஸ் 6.28-inch FHD+ AMOLED டிஸ்பிளேவை பெற்றுள்ளன. ஜியோமி 12 ப்ரோ சற்றே நீளமான 6.73-inch WQHD+ E5 AMOLED டிஸ்பிளே 120Hz டயனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எல்.டி.பி.ஓ பேக்பிளேன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஜியோமி 12 மற்றும் 12 ப்ரோவில்  premium Snapdragon 8 Gen 1 chipset கிடைத்துள்ளன. ஜியோமி 12எக்ஸ்-ல் Snapdragon 870 chipset இடம்பெற்றுள்ளது.

கேமராவை பொறுத்தவரை ஜியோமி 12 மற்றும் 12 எக்ஸ் போனில் 50 மெகாபிக்ஸல் சோனி IMX766 பிரைமரி சென்சார், 13 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 5 மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார் இடம்பெற்றுள்ளன. ஜியோமி 12 ப்ரோ போனில் 50 மெகாபிக்ஸல் சோனி IMX707 பிரைமரி சென்சார், 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார், 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இடம்பெற்றுள்ளன.



12 எக்ஸ் மாடலில் 4,500mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இடம்பெற்றுள்ளது. 12 ப்ரோவில் 4,600mAh பேட்டரி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இடம்பெற்றுள்ளது. மேலும் ப்ரோ மாடலில் 50W ஒயர்லெஸ் சார்ஜிங், 10W ரிவர்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது.

ஜியோமி 12-ன் 8ஜிபி/128 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ.57,200-ஆக உள்ளது. ஜியோமி ப்ரோ  8ஜிபி/256ஜிபி மாடலில் விலை இந்திய மதிப்பில் ரூ76,300-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோமி 12எக்ஸ் போனின் 8ஜிபி/128 ஜிபி விலை ரூ.49,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News