செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

பட்டுக்கோட்டையில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-04 10:09 GMT   |   Update On 2021-04-04 10:09 GMT
தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தஞ்சை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மணிகூண்டு பகுதியில் நகராட்சி பெண் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் செல்லும் பொது மக்களை தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்தனர்.

தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தஞ்சை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் நகராட்சி பெண் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் செல்லும் பொது மக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் பெயர் செல் நம்பர் போன்றவற்றை குறித்துக்கொண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதேபோல் பெரும்பாலான பொது மக்கள் முக கவசத்தை கையில் வைத்துக்கொண்டு முகத்தில் அணியாமல் சென்றவர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தும் கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News