தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ10

மேம்பட்ட கேமரா மற்றும் சிறப்பம்சங்களுடன் உருவாகும் எம்ஐ10 அல்ட்ரா

Published On 2020-08-10 04:50 GMT   |   Update On 2020-08-10 04:50 GMT
சியோமி நிறுவனம் மேம்பட்ட கேமரா மற்றும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் எம்ஐ10 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் எம்ஐ10 5ஜி ஸ்மார்ட்போனினை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து சியோமி நிறுவனம் விரைவில் எம்ஐ10 சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய ஸ்மார்ட்போன் எம்ஐ10 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் உலகின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



எம்ஐ10 அல்ட்ரா மாடல், ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இருக்கும் என சியோமி இணை நிறுவனர் லெய் ஜூன் தெரிவித்து இருக்கிறார். 

இத்துடன் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எம்ஐ10 அல்ட்ரா மாடலில் 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடல் செராமிக் பேக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. செராமிக் எடிஷன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய எம்ஐ10 அல்ட்ரா டிரான்ஸ்பேரன்ட் வேரியண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News