செய்திகள்
கோப்புப்படம்

நீட் தேர்வு: தமிழகத்தில் கூடுதலாக நான்கு நகரங்களில் தேர்வு மையங்கள்

Published On 2021-07-15 11:06 GMT   |   Update On 2021-07-15 11:06 GMT
தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 18 நகரங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்தப்படும். கடந்த ஆண்டு 155 நகரங்களில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும், தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 155-ல் 198-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020-ல் தேர்வு எழுதும் மையம் 3862 ஆக இருந்தது. மையத்தின் எண்ணிக்கையும் அதிரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக செங்கல்பட்டு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 18-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு செப்டம்பர் 12-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13-ந்தேதி (நேற்றுமுன்தினம்) மாலை ஐந்து மணிக்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு தொடங்கியது.
Tags:    

Similar News