ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி செலரியோ

சோதனையில் சிக்கிய புதிய செலரியோ

Published On 2020-11-20 10:53 GMT   |   Update On 2020-11-20 10:53 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை செலரியோ மாடலை உருவாக்கி வருகிறது. இது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

ஸ்பை படங்களின் படி புதிய செலரியோ அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. முன்புறம் புது வடிவமைப்பில் ஒற்றை ஸ்லாட் கிரில், ஹெட்லைட் மற்றும் பம்பம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பென்டர்களில் இன்டிகேட்டர் லைட்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.



இத்துடன் பின்புறம் பெரிய, டெயில் லேம்ப்கள், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட ரிப்ளெக்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய செலரியோ மாடலில் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய செலரியோ மாடலில் பிஎஸ்6 ரக 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் டாடா டியாகோ, ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் ரெனால்ட் க்விட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
Tags:    

Similar News