தொழில்நுட்பம்
நோக்கியா 110 4ஜி

ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் புது நோக்கியா மொபைல் அறிமுகம்

Published On 2021-07-24 04:17 GMT   |   Update On 2021-07-24 04:17 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்து இருக்கும் நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை.


ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 110 4ஜி பீச்சர் போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நோக்கியா போன் வோல்ட்இ காலிங் வசதி கொண்டிருக்கிறது. புதிய நோக்கியா 110 மாடலில் 1.8 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், இன்-பில்ட் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, மியூசிக் பிளேயர், 0.8 எம்.பி. QVGA பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள மேம்பட்ட யு.ஐ. நேவிகேஷன் அம்சத்தை சிறப்பாக வழங்குகிறது. புதிய ரீட்-அவுட் அம்சம் எழுத்துக்களை வார்த்தைகளாக உச்சரிக்கும். முந்தைய நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மாடல்களில் வழங்கப்பட்டு இருந்த ப்ளூடூத் அம்சம் இந்த மாடலில் வழங்கப்படவில்லை.



நோக்கியா 110 4ஜி அம்சங்கள்

- 1.8 இன்ச் 160x120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
- 128 எம்பி ரேம், 48 எம்பி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர்
- 0.8 எம்.பி. QVGA பிரைமரி கேமரா
- டூயல் சிம்
- GSM: 850, 900, 1800 | WCDMA: 1, 5, 8 | FDD LTE: 1, 3, 5, 8
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

நோக்கியா 110 4ஜி மாடல் எல்லோ, அக்வா மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2799 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான், நோக்கியா வலைதளங்களில் இன்று (ஜூலை 24) விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News