செய்திகள்
கருப்பு பூஞ்சை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 35 பேர் பாதிப்பு

Published On 2021-06-06 09:25 GMT   |   Update On 2021-06-06 09:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று குறைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதில் இள வயதினர், வயதானவர்கள் என ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்பும் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா 2-வது அலையே கட்டுக்குள் வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பனஹள்ளி அருகே உள்ள ஜேடுகொத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இந்நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News