உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை.

விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-01-07 09:38 GMT   |   Update On 2022-01-07 09:38 GMT
ஒரத்தநாடு அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரக்கோட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. 

இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்து நெல் 
ஐந்து கிலோ மீட்டர் தூரம் சாலையில் ஒரு மாத காலமாகவே 
நெல்லை கொட்டி காத்து வந்துள்ளனர்.
 
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நிறம் மாறிப் போனதால் 
ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கக்கரக்கோட்டை மெயின் ரோட்டில் 
சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கக்கரக்கோட்டை, பின்னையூர், வெட்டிக்காடு, கரடிப்பட்டி, தெக்கூர், ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டு வந்து ஒரத்தநாட்டிலிருந்து வெட்டிக்காடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் 
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தகவலறிந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, தாசில்தார் சீமான், நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் 
சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறுவடை செய்த நெல்லை எடுக்க உத்தரவாதம் கொடுத்த பின் 
மறியல் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News