ஆன்மிகம்
மாசி மகத்தையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

மாசி மகத்தையொட்டி வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2021-02-21 08:03 GMT   |   Update On 2021-02-21 08:03 GMT
இந்த ஆண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரிக்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாசி மகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரிக்கு மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்க நாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள் மற்றும் வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்படுவது வழக்கம்.

அதேபோல் புதுவை மணக்குள விநாயகர் மற்றும் உள்ளூரில் இருந்து உற்சவ மூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற் கரைக்கு கொண்டு வரப்படும். அதனைதொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மாசி மகம் தீர்த்தவாரிக்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் சுத்தம் செய்து பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News