தொழில்நுட்பம்
ஃபோர்சா ஸ்டிரீட்

சர்வதேச சந்தையில் ஃபோர்சா ஸ்டிரீட் இலவச ரேசிங் கேம் அறிமுகம்

Published On 2020-05-06 11:38 GMT   |   Update On 2020-05-06 11:38 GMT
சர்வதேச சந்தையில் ஃபோர்சா ஸ்டிரீட் எனும் இலவச ரேமிங் கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பாரப்போம்.



ஃபோர்சா ஸ்டிரீட் எனும் ரேசிங் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ரேசிங் கேம் ஒவ்வொரு போட்டியில் வென்று புதிய கார்களை வாங்குவது மற்றும் கார் பாகங்களை அப்கிரேடு செய்து கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேம் ஸ்டிரீட் ரேசிங் சார்ந்தது ஆகும். இதில் அதிக மர்மங்கள் இருப்பதால், விளையாடும் போது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் சிறப்பு நிகழ்வுகள், மற்றும் தீம்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தழுவியும் இந்த கேம் நகர்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.



மற்றவர்களுடன் விளையாடும் போது அதிக கார்களை சேகரிக்க ஒவ்வொரு வாரமும் மற்ற பயனர்களுடன் நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் கேமிங் குழுவினரின் பட்டியலில் முன்னேற முடியும்.

கேம் வெளியீட்டை கொண்டாடும் வகையில், போர்சா ஸ்டிரீட் கேமினை ஜூன் 5 ஆம் தேதி வரை விளையாடுவோருக்கு  2017 ஃபோர்டு ஜிடி வழங்கப்படும். இதோடு கேம் கிரெடிட்கள் மற்றும் புதிய கார்களை அன்லாக் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News