ஆட்டோமொபைல்
யமஹா ரே ZR ஹைப்ரிட்

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2021-06-19 10:38 GMT   |   Update On 2021-06-19 10:38 GMT
யமஹா நிறுவனத்தின் 2021 பசினோ 125 ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது.

யமஹா நிறுவனம் 2021 பசினோ 125 ஹைப்ரிட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய யமஹா பசினோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. பசினோ மட்டுமின்றி ரே ZR ஹைப்ரிட் ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்துள்ளது.

எனினும், இரு ஹைப்ரிட் மாடல்களின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்திய சந்தையில் பசினோ மாடல் 2015 மே மாத வாக்கில் அறிமும் செய்யப்பட்டது. அப்போது இந்த மாடலில் 113 சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் 7 பி.ஹெச்.பி. பவர், 8.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கியது. இதை தொடர்ந்து இதன் பிஎஸ்6 மாடல் 125சிசி பிரிவில் அறிமுகமானது.



தற்போது அறிமுகமாகி இருக்கும் பசினோ ஹைப்ரிட் மாடலில் உள்ள மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஸ்டார்டர் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) உள்ளது. இது என்ஜினுக்கு தேவையான சமயத்தில் பவர் அசிஸ்ட் கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

புதிய SMG தவிர இதன் என்ஜின் முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இது 125சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் ஆகும். இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
Tags:    

Similar News