ஆன்மிகம்
வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-10-07 06:54 GMT   |   Update On 2020-10-07 06:54 GMT
வேதாரண்யத்தில் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் நகர் பகுதியில் நாட்டு மடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் உற்சவம், அம்மன் புறப்பாட்டுடன் நடைபெறும். கொரோனா தடையால் இந்த ஆண்டு அம்மன் வீதியுலா மற்றும் உற்சவம் நடைபெறவில்லை.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதநீர் அடங்கிய குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்பு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து அம்மனை வழிபட்டனர். விழாவில் கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை 10 நாள் மண்டகபடிதாரர்கள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News