செய்திகள்
பெண் மந்திரி சுவாதிசிங்

போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு

Published On 2019-11-17 12:41 GMT   |   Update On 2019-11-17 12:41 GMT
உத்தரபிரதேசத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி குறித்து விசாரணை நடத்த முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்தியாக சுவாதிசிங் இருந்து வருகிறார். இவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை மிரட்டிய ஆடியோ பதிவுகள் சமூக வலை தலங்களில் வேகமாக பரவியது.

அங்குள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மகனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் இன்ஸ்பெக்டர் புதிதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளார். இதை அறிந்த மந்திரி சுவாதிசிங், இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து மிரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வைரலாக பரவி வரும் அந்த மிரட்டல் ஆடியோ 36 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் இன்ஸ்பெக்டரிடம் பேசிய சுவாதிசிங், ‘ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் போலியானது எனவே வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுகுறித்து முதல் மந்திரிக்கும் நன்கு தெரியும். இந்த வழக்கு பதிவு செய்யாமல் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இத குறித்து தகவல் அறிந்த முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மந்திரி சுவாதிசிங்கை தனது வீட்டுக்கு வரவழைத்து கண்டனம் தெரிவித்தார்.

மிரட்டல் ஆடியோ குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டி.ஜி.பி. ஓ.பி.சிங்கிற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து லக்னோ சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு நைதீனி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாநில அரசை குற்றம் சாட்டி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News