செய்திகள்
கோப்புபடம்

சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா

Published On 2021-10-12 06:54 GMT   |   Update On 2021-10-12 09:57 GMT
நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஷெர்லின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
திருப்பூர்:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி முதன்மை மாவட்ட நீதிபதியின் ஆணையின் படி சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் இன்று திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் குழு செயலாளர் பிரஷ்னேவ் தலைமை ஏற்று மாணவிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கினார். அவர் பேசுகையில், உலக பெண் குழந்தைகள் தினத்தில் உங்களுடன் உரையாடுவது மகிழ்ச்சி. 

பெண் குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டியது அவசியம். தனக்கு தவறு ஏற்படும்போது விழிப்போடு இருந்து தன்னை காத்துக்கொள்வதோடு தவறுக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்  என்றார்.

நிகழ்ச்சியில் இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஷெர்லின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா மற்றும் எராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News