அழகுக் குறிப்புகள்
வெந்தயம் மாஸ்க்

கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் மாஸ்க்

Published On 2022-01-21 08:29 GMT   |   Update On 2022-01-21 08:29 GMT
கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.
கூந்தலுக்கு வெந்தய மாஸ்க்கை பயன்படுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும். அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து விட்டு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த தொடர்ந்து செய்து வந்தால் உச்சந்தலை அரிப்பு பிரச்சனை நீங்கும்.

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும் படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர உங்களின் பொடுகுத் தொல்லை குறைந்து உச்சந்தலை அரிப்பு அறவே நீங்கி விடும்.
Tags:    

Similar News