செய்திகள்
கோப்புப்படம்

உயிரிழந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து - மத்திய அரசு கூறியதாக வைரலாகும் தகவல்

Published On 2021-04-09 05:44 GMT   |   Update On 2021-04-09 05:44 GMT
உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அந்தஸ்து கொடுக்கும் விஷயத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக கூறி பகீர் தகவல் வைரலாகி வருகிறது.


சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்ட எல்லையில் மவோயிஸ்டுகளுக்கு எதிரான மோதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ஜவான்களுக்கு மத்திய அரசு `தியாகி' அந்தஸ்து வழங்க மறுத்து இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளில் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொகுப்பின் ஸ்கிரீன்ஷாட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தி மொழியில் உள்ள ஸ்கிரீன்ஷாட், `படைகளுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்க முடியாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது' எனும் தலைப்பு கொண்டுள்ளது.

வைரல் ஸ்கிரீன்ஷாட்டை ஆய்வு செய்ததில், அது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி தொகுப்பில் இடம்பெற்று இருந்தது. அந்த தொகுப்பில், எந்தவிதமான பாதுகாப்பு படையிலும் தியாகி அந்தஸ்து வழங்கப்படவில்லை என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



இந்திய ஆயுத படைகள் எதிலும் தியாகி எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் இது சிஆர்பிஎப் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பொருந்தும். இதுகுறித்து சிஆர்பிஎப் அலுவலர் கூறும் போது, தியாகி அந்தஸ்து என சொற்களை ஆய்வு செய்ய வேண்டாம், ஆனால் எந்தவிதமான சூழலிலும் வீரர் உயிரிழந்தால் அவர் எப்போதும் தியாகியாகவே கருதப்படுவார். மத்திய அரசு தியாகிகள் குடும்பத்தை நன்றாக கவனித்து கொள்கிறது என தெரிவித்தார். 

அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளது போன்று உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மத்திய அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News