செய்திகள்
கோப்புப்படம்

உள்ளாட்சி அமைப்புகள் மறுவரையறை- விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள்

Published On 2021-07-22 07:49 GMT   |   Update On 2021-07-22 07:49 GMT
உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து 1967க்குப் பின் பறிக்கப்பட்ட ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு ஆகியன திரும்ப வழங்க வேண்டும்.
திருப்பூர்:

உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள மாநில அரசு அதற்கு முன் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:-

ஜனநாயக அமைப்பின் அடித்தளமாக இருப்பது உள்ளாட்சிகள். அதற்கு உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். செப்டம்பர் மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன், அவற்றில் சில திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

 இவற்றில் நேரடி மக்களாட்சி அறிமுகப்படுத்த வேண்டும். பதவி விலகும் அமைப்பு அடுத்த குழுவிடம் நேரடியாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து 1967க்குப்பின் பறிக்கப்பட்ட ஆரம்ப சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு ஆகியன திரும்ப வழங்க வேண்டும். அரசியல் கட்சி தலையீடு இன்றி சுயேச்சையாக மட்டுமே முடிவெடுக்க அதிகார பகிர்வு வேண்டும். தேவைப்படும் உள்ளாட்சி அமைப்புகளை மறுவரையறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News