செய்திகள்
கோப்புபடம்

வீட்டுமனை பட்டா கேட்டு மனுபுறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

Published On 2021-08-01 08:36 GMT   |   Update On 2021-08-01 08:36 GMT
ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அவற்றையும் கையகப்படுத்த அரசின் வழிகாட்டுதலை பெற்று வருகின்றனர்.
அவிநாசி:

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். அவ்வகையில் மாநிலம் முழுக்க லட்சக்கணக்கில் மனுக்கள் குவிந்தன. 

இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மனுக்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களே பட்டா கேட்டுள்ள நிலையில் இடம் தேர்வு செய்து உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அந்தந்த தாலுகாவில் உள்ள வருவாய்த்துறையினர், புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அவற்றையும் கையகப்படுத்த அரசின் வழிகாட்டுதலை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News