செய்திகள்
கோப்புப்படம்

அவினாசியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம்

Published On 2021-07-04 07:33 GMT   |   Update On 2021-07-04 07:33 GMT
வணிக வளாகம் கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கை நகரமைப்பு துறையின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி:

அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமாக பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்த மார்க்கெட் கட்டடம் கடந்த மூன்றாண்டுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.அங்கு ‘மல்டி லெவல்’ பார்க்கிங் வசதியுடன் கூடிய வணிக வளாகம் கட்ட பேரூராட்சி சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அப்பகுதி புதர்மண்டி கிடந்தது.

இதையடுத்து கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியை முழுமையாக சுத்தம் செய்தனர். இது மக்கள் மத்தியில் பாராட்டைபெற்றது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், 

வணிக வளாகம் கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கை, நகரமைப்பு துறையின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வணிக வளாகம் கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
Tags:    

Similar News