தொழில்நுட்பம்
மனு குமார் ஜெயின்

உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-07-11 04:21 GMT   |   Update On 2019-07-11 04:21 GMT
ரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.



சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த வகையில் சந்தையில் வெளியாகி ஆறு மாதங்களில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக நான்கு மாதங்களில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையானதாக சியோமி அறிவித்தது.



புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில் சியோமி இந்தியா ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த விற்பனை சியோமியின் அதிகாரப்பூர்வ Mi வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட்டில் நடைபெறுகிறது.

இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே20 சீரிஸ் விலை அதிகமாக இருக்கும் என்பதால் இது ரெட்மி நோட் 7 சீரிஸ் விற்பனையை பாதிக்காது என்றே கூறப்படுகிறது. 
Tags:    

Similar News