செய்திகள்
சோனியா காந்தி - நரேந்திரமோடி

பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு பாஜக அரசு குற்றவாளிகளின் பக்கம் நிற்கிறது - சோனியாகாந்தி கடும்தாக்கு

Published On 2020-10-18 16:25 GMT   |   Update On 2020-10-18 16:25 GMT
பாஜக அரசு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளின் பக்கம் நிற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி புல் அறுக்க சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச பாஜக அரசுக்கு காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

மேலும், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து வரும் 26 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடுமுழுவதும் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பேசியதாவது:-

நமது ஜனநாயகம் அதன் மிகவும் ஒழுங்கினமான காலங்கத்தை கடந்து செல்கிறது. நமது அரசியலமைப்பு மீது வடிவமைக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. 

குடிமக்களின் நலனில் அக்கரையில்லாத ஒரு சில முதலாளிகளின் லாபத்திற்காக உதவும் அரசாங்கத்தால் தற்போது நமது நாடு ஆட்சிசெய்யப்படுகிறது.  

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சட்டத்தை மதிப்பதையும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதையும்  விட்டுவிட்டு பாஜக அரசு குற்றவாளிகளின் பக்கம் நிற்கிறது. 

ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. இது தான் புதிய ராஜ தர்மமா? 

என சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News