செய்திகள்
கரும்புக்காட்டில் ஏர்கலப்பையால் களை எடுக்கும் விவசாயி

கரும்புக்காட்டில் ஏர்கலப்பையால் களை எடுக்கும் விவசாயிகள்

Published On 2021-06-15 07:08 GMT   |   Update On 2021-06-15 10:08 GMT
கரும்பு சாகுபடியில் முதல் போகம் அறுவடை செய்த பின்பு களை எடுத்து பராமரித்து அடுத்த போகத்திற்கு கரும்புக்கட்டைகளை தயார் செய்ய வேண்டும்.
உடுமலை:

தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான கூலித்தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் குறித்த நேரத்தில் களையெடுத்தல், உரமிடுதல், பராமரிப்பு மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்கு முடியவில்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றி விடுவதால் விளைச்சலும் குறைந்து விடுகிறது.இதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். 

இந்தநிலையில் உடுமலை கல்லாபுரம் பகுதியில் கூலியாட்கள் பற்றாக்குறையால் கரும்புக்காட்டில் மாடுகள் பூட்டிய ஏர்கலப்பை கொண்டு களை எடுத்து வருகின்றனர். கரும்பு சாகுபடியில் முதல் போகம் அறுவடை செய்த பின்பு களை எடுத்து பராமரித்து அடுத்த போகத்திற்கு கரும்புக்கட்டைகளை தயார் செய்ய வேண்டும்.

அதற்கு களை எடுத்தல், மண் அணைத்தல் போன்ற பணிகள் அவசியமானதாகும்.கூலியாட்களை எதிர்பார்த்து நாட்கள் கடந்ததே தவிர வேலை நடைபெறவில்லை.இதையடுத்து கரும்பு கட்டைகளுக்கு நடுவே முளைத்துள்ள களையை இரும்பு ஏர்கலப்பை மூலம் அகற்றி ஓரிரு ஆட்களின் துணையுடன் மண்அணைத்து வருகின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் திருத்தங்கள் செய்து உணவை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் . விவசாயத்தில் நிலவுகின்ற கூலிஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News