செய்திகள்
ஜிகே வாசன்

பள்ளிகள் திறப்பை நவம்பர் 8ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2021-10-11 06:20 GMT   |   Update On 2021-10-11 06:20 GMT
அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
கிருஷ்ணகிரி

த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை அரசு விரைவுப்படுத்த வேண்டும். வருகிற தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரத்திற்கு முன்னும், பின்னும் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலக் கட்டங்களில் மாணவர்கள் வெளியில் சென்றால் பாதிப்பு ஏற்படும். எனவே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதி அன்று பள்ளிகளை திறக்காமல் நவம்பர் 8-ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் .

தி.மு.க. அரசின் தேர்தல் கால அறிவிப்புகளான பெண்களுக்கு 1000 ரூபாய், நெல்லுக்கு ஆதார விலை, மாதந்தோறும் மின் கணக்கீடு, நெசவாளர்களுக்கு தனியார் வங்கி ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி தேர்தல் வாக்குறுதி ஏற்றவாறு ரத்து செய்யவில்லை என்பது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. மதுக்கடைகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில், வழிபாட்டுதலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News