ஆன்மிகம்
கிருஷ்ணன்

நல்ல குணமுள்ள கணவர் கிடைக்க இந்த விரதத்தை கடைபிடிங்க

Published On 2019-12-30 08:07 GMT   |   Update On 2019-12-30 08:07 GMT
நல்ல குணமுள்ள கணவர் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.
பிறந்த வீட்டில் எப்படி சந்தோசமாக வாழ்கிறார்களோ அதே சந்தோசத்தை தருகிற அளவுக்கு புகுந்த வீடும், கணவரும் அமைய வேண்டும் என்பது இன்றைய காலப் பெண்களின் பெருங்கனவாக இருக்கிறது. நல்ல குணமுள்ள கணவர்கள் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.

எல்லா செல்வங்களும் நிறைந்து நாடும் நாட்டு மக்களும் தன்னிறைவோடு இருக்க மார்கழி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் ஆயர் குலப் பெண்கள் தங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை சிறப்பானதாக அமைய கண்ணனின் துதி பாடி நோன்பு இருந்தனர். மார்கழி மாதத்தில் இந்த விரதத்தை ஆயர்குலப் பெண்கள் மேற்கொண்டதால் மார்கழி விரதம் என்ற பெயர் இதற்கு வந்து விட்டது.

எம்பெருமான் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை, சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, இதோடு திருப்பள்ளியெழுச்சி உள்ளடக்கிய பாடல்களை மார்கழி மாதத்தில் பெண்கள் மனமுருகிப் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள். திருப்பாவையில் 30 பாடல்களும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் சேர்த்து 30 பாடல்களும் இருக்கின்றன. மார்கழி மாதத்தில் விரதமிருக்கும் போது செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பூஜையறையில் ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி முதல் நாளில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே என்ற பாடலோடு தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும். ஒவ்வொரு துதிப் பாடல்களையும் மூன்று முறை பாடப்படவேண்டும். 
Tags:    

Similar News