ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

3 நாட்கள் தடைக்கு பிறகு திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-08-17 05:27 GMT   |   Update On 2021-08-17 05:27 GMT
திருச்செந்தூர் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13-ந்தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

எனினும் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருகிற 19-ந்தேதி வரையிலும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். தொடர்ந்து 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் பக்தர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுகிறது.
Tags:    

Similar News