இந்தியா
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த்

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு மீண்டும் கொரோனா

Published On 2022-01-18 01:56 GMT   |   Update On 2022-01-18 01:56 GMT
பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு போலீஸ்காரர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலைக்கு பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் கொரோனா பரிசோதனை செய்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று கமல்பந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கடந்த ஒரு வாரமாக கமிஷனர் அலுவலகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கமல்பந்த் வேண்டுகோள் விடுத்து உள்ளார். கமல்பந்த் ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News